மானாமதுரை, ஜூலை 1: மானாமதுரையில் ஆண்டிகுளம் ஊரணி தூர்வாரும் துவங்கியது.
மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 11வது வார்டில் ஆண்டிகுளம் ஊரணி உள்ளது. இந்த ஊரணியை தூர்வார வேண்டும் என அப்பகுதியினர் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர். நகராட்சி பொறியியல் பிரிவில் திட்ட மதிப்பீடு தயார் செய்து தூர் வாரும் பணி துவங்கியது. இதற்கான துவக்க விழாவில் நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, பொறியாளர் பட்டுராஜன், வார்டு கவுன்சிலர்கள் லதாமணிமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி கூறுகையில், ‘மானாமதுரை நகராட்சிக்குட்ட வார்டுகளில் உள்ள ஊரணிகளை தூர் வார ரூ.85 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து ஊரணிகளும் தூர் வாரப்படும்’ என்றார்.