திருத்துறைப்பூண்டி, பிப். 19: தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வி துறையால் மாநில அளவில் கன்னியாகுமரியில் நடத்தப்பட்ட ஜூடோ மற்றும் டேக்வாண்டோ போட்டியில் திருத்துறைப்பூண்டி சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் துரைராஜ் ஜூடோ போட்டியில் மாநில அளவில் முன்றாமிடம், லட்சுமி நாராணயனன் டேக்வாண்டோ போட்டியில் முன்றாமிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். மாணவர்களை திருவாருர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் நேரில் அழைத்து வாழ்த்தினார்.
மேலும் சாய்ராம் கல்விக்குழுமத் தலைவர் டாக்டர்.சாய்பிரகாஷ் லியோமுத்து, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சௌந்தரராஜன், மாவட்ட கல்வி அலுவலர் மாயகிருஷ்ணன் மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் மாணவர்களை ஊக்கப்படுத்தி வாழ்த்தினர்.இதில் பள்ளி நிர்வாக பிரதிநிதி சோமசுந்தரம், பள்ளி முதல்வர் கஜேந்திரன், உடற்கல்வி ஆசிரியர் சசிகுமார் மற்றும் முத்து ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் முத்துக்குமரன் ஆகியோர் உடனிருந்தனர்.