விருதுநகர், ஜூன் 25: அகவிலைப்படியுடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. விருதுநகர் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் மாநில துணைத்தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதிப்படி அகவிலைப்படியுடன் குறைந்த பட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். உயர்நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தி 2.57 காரணி அடிப்படையிலான உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில செயலாளர் கண்ணன், நிர்வாகிகள் அந்தோணிராஜ், மாயமலை, ஆனந்தவள்ளி உள்பட பலர் பங்கேற்றனர்.