காரியாபட்டி, நவ.22: சென்னை உலக பாரம்பரிய சிலம்பாட்ட கழகம் சார்பாக மாநில அளவிலான சிலம்ப போட்டி மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்றது. இதில் காரியாபட்டி பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். காரியாபட்டி பிசிண்டி அரசு பள்ளி, தோணுகால் சர்வ சேவா பள்ளியை சேர்ந்த நிலா, கீதா மணி, பாவனா, கனிஷ்கா ஆகியோர் மாணவியர் பிரிவில் முதல் இடத்தை பெற்றனர்.
வெற்றிபெற்ற மாணவிகள் நிலா, சாதனா இருவரும் பிப்ரவரி மாதம் 11ம் தேதி சென்னையில் நடக்க உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர், பயிற்சியாளர்கள் அபிமணி, சின்ன மணிகண்டன், காயத்ரி, சிவப்பிரியா, மல்லிகா, சஞ்சய் குமார், ரகுராம் ஆகியோர் பாராட்டினர்.