சோழவந்தான், மே 25: சோழவந்தானில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது.
சோழவந்தான் கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில், ஆலங்கொட்டாரம் அரசஞ்சண்முகனார் அரசு மேல்நிலைப் பள்ளியில் மூன்று நாட்கள் நடைபெறும் இப்போட்டியில், மாநில அளவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 21 அணிகள் பங்கேற்கின்றனர். இதில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக, சுழற் கோப்பையுடன், ரூ.21 ஆயிரம் ரொக்கம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கூடைப்பந்தாட்ட கழக சேர்மனும், திமுக கவுன்சிலருமான மருதுபாண்டியன், நிர்வாகிகள் சந்தோஷ், பங்காருராஜ், அபிராமி, ஒருங்கிணைப்பாளர்கள் தீர்த்தம், சிவமாறன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.