தரங்கம்பாடி, ஜூன் 25: மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் அருகே உள்ள காட்டுச்சேரி அரசு விளையாட்டு அரங்கில் மாநில கால்பந்து போட்டியில் பங்கேற்கும் நாகை மாவட்ட ஜீனியர் கால்பந்தாட்ட வீரர்களுக்கு சீருடை வழங்கும் விழா நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கால்பந்தாட்ட சங்கம் துவக்கபடாததால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பொறையார், சீர்காழி, மயிலாடுதுறை பகுதிகளில் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர்கள் நாகை மாவட்ட கால்பந்து சங்கத்தில் சேர்ந்து விளையாடி வருகின்றனர்.
நாகை மாவட்ட ஜீனியர் கால்பந்தாட்ட குழு, விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற உள்ள மாநில கால்பந்து போட்டியில் பங்குபெற உள்ளது. அதற்காக அந்த கால்பந்து வீரர்களுக்கு புதிய சீருடை வழங்கபட்டது. நாகை மாவட்ட கால்பந்து சங்க தலைவர் நிஜாமுதீன் சீருடைகளை வழங்கினார். மாநில கால்பந்து சங்க துணை தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் சுதாகர், செந்தில்குமார், விஜயகுமார், ராமு, மணிகண்டன், ராஜேஷ், செய்திருந்தனர்.