வேலாயுதம்பாளையம், ஆக. 3: சென்னையில் கடந்த மாதம் 29, 30ம் தேதிகளில் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கம் நடத்திய மாநில அளவிலான சப்-ஜூனியர் கராத்தே போட்டியில் கரூர் மாவட்டத்தின் சார்பில் கலந்து கொண்ட யுகி ஷிட்டோ-ரியூ கராத்தே ஸ்கூல் மாணவன் கவிபிரியன் (லெவன் இயர்ஸ் பாயஸ் கேட்டகிரியில் 45 கிலோ எடை கொண்ட) சண்டை பிரிவில் தமிழ்நாடு அளவில் மூன்றாம் இடம் பிடித்து சான்றிதழ் மற்றும் பதக்கத்தை வென்றுள்ளார்.
மேலும் கேரளாவில் தேசிய அளவில் நடைபெற உள்ள காரத்தே போட்டிக்கு தேர்வாகி உள்ளார். வெற்றி பெற்ற மாணவனை தமிழ்நாடு கராத்தே சங்கத்தின் டெக்னிக்கல் பயிற்சியாளர் சென்சாய் ராஜசேகரன் , கரூர் மாவட்ட கராத்தே சங்க தலைவர் சரவணன் , செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.