செங்கோட்டை,ஆக.15: பெக்யூலியர் பான்ஸ் அகாடமி சார்பில் மாநில அளவிலான சதுரங்க போட்டி பாளையங்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடந்தது. இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் பள்ளி 7ம் வகுப்பு மாணவர் ஜெகத் பிரபு 2வது இடம் பிடித்தார். இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பள்ளி தாளாளர் சேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.
மாநில அளவில் சதுரங்கப் போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் பள்ளி மாணவர் சாதனை
previous post