கோவை, ஜூன் 10: கோவை மாவட்ட அத்லெட்டிக் கிளப் சார்பாக முதலாவது தமிழ்நாடு அத்லெட்டிக் போட்டி கோவை நேரு ஸ்டேடியத்த்தில் நடைபெற்றது.
இதில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் ஓட்டம், தொடர் ஓட்டம், ரிலே, தடை தாண்டுதல், மும்முறை தாண்டுதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
கோவை யுனிக்ஸ் ஸ்பொர்ட்ஸ் அகாடமியை சேர்ந்த மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 7 தங்கம், 5 வெள்ளி மற்றும் 6 வெண்கல பதக்கங்களை வென்றனர். இதன்மூலம், இந்த மாநில அளவிலான தடகள போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தனர். இது மட்டுமின்றி மாணவர்களுக்கான 16 வயதிற்கு உட்பட்ட பிரிவிலும் ஓபன் கேட்டகிரியிலும் மாநில அளவில் முதலிடம் பிடித்தனர். சென்னை பாடி ஸ்போர்ட்ஸ் அகாடமி இப்போட்டியில் முதலிடம் பிடித்து கோப்பையை வென்றது.