டெல்லி: மாநிலங்களின் உரிமை காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கை இருந்தால்தான், ஒரே நாடு ஒரே வரி திட்டம் சாத்தியமாகும் என தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு தமிழ்நாடு நிதியமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். ஜி.எஸ்.டி. தீர்ப்பாயம் அமைத்தால் உறுப்பினர்களை நியமிப்பதில் மாநிலங்களுக்கு கூடுதல் உரிமை வழங்க வேண்டும். ஒரே நாடு, ஒரே வரி என்பது போன்ற ஸ்லோகன்களை வைத்து அரசியல் செய்வது சுலபம், ஆனால் அதை செயல்படுத்துவது கடினம் என நிதியமைச்சர் கூறினார்….