ஓசூர், ஆக.31: ஓசூர் மாநகர திமுக செயலாளரான மேயர் சத்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், ஓசூர் மாநகர திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம், நாளை(1ம் தேதி) காலை 10 மணிக்கு, ஓசூர் -தளி சாலையில் மாவட்ட திமுக அலுவலகம் அருகில் உள்ள திடலில் நடைபெற உள்ளது. அவைத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகிக்கிறார். பொருளாளர் தியாகராஜ் வரவேற்கிறார். கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சருமான சக்கரபாணி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ, ஓசூர் மாநகர செயலாளர் சத்யா ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி பேசுகின்றனர். எனவே, கூட்டத்தில் மாநகர, பகுதி, வட்ட நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பாக முகவர்கள் பிஎல்ஏ- 2, பாகக்குழு நிர்வாகிகள் பிஎல்சி முகவர்கள் மற்றும் மூத்த முன்னோடிகள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு சத்யா தெரிவித்துள்ளார்.
மாநகர திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்
previous post