மதுரை, ஜூன் 30: மதுரை மாநகர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், திமுக தலைவர் கலைஞர் 102வது பிறந்தநாள் விழா மற்றும் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரக் கூட்டம் மதுரை செல்லூர் மற்றும் அண்ணாநகர் பகுதியில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சௌந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏ, திமுக உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினர்கள் பொன் முத்துராமலிங்கம், பெ.குழந்தைவேலு, திமுக தணிக்கை குழு உறுப்பினர் வ.வேலுசாமி, மாவட்ட அவைத் தலைவர் மா.ஒச்சுபாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
பகுதி செயலாளர்கள் குரும்பன், மேலமடை சித்திக் ஆகியோர் வரவேற்றனர். இந்த கூட்டத்தில் திமுக பேச்சாளர்கள் சுந்தரராஜன், அசாருதீன், கதிர்வேல், செசிலின் தீப்தி சிந்தியா, வட்டச் செயலாளர்கள் பவுன்ராஜ், நல்லகாமன், மாயம் பெருமாள், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் தமிழ் சந்திரன், தினேஷ் குமார், ராஜபாண்டி, பொதுக்குழு உறுப்பினர்கள் வைகை பரமன், ஏ.கே.ஆறுமுகம், முத்து கணேசன் உள்ளிட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள், திமுகவினர், திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.