திருச்சி, பிப்.14: திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவில் அருகே கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டியிருந்த இரு சக்கர வாகனங்கள் 3, மற்றும் மத்திய பேருந்து நிலையம் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் அருகே நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனங்கள் 3 என மொத்தம் 6 டூ வீலர்களை போலீசாா் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கண்டோன்மென்ட் போலீசார் வழக்குப்பதிந்து சம்மந்தப்பட்ட இரு சக்கர வாகனங்களின் உரிமையாளர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாநகர் பகுதியில் கேட்பாரற்று நின்ற 6 டூவீலர்கள் பறிமுதல்: ரோந்து பணி போலீசார் அதிரடி
0