கோவை, ஜூன் 10: கோவை சிவானந்தாகாலனியை சேர்ந்தவர் நாகேந்திரன் (39). இவர் கணபதி டெக்ஸ்டூல் பாலம் அடியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் நாகேந்திரனிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டதுடன், அவரின் சட்டைப்பையில் இருந்த பணத்தை பறித்து கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இது குறித்து நாகேந்திரன் ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் நாகேந்திரனிடம் பணம் கேட்டு மிரட்டியவர் ரத்தினபுரியை சேர்ந்த இம்மானுவேல் மோசஸ் (25) என்பதும், பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும், சாட்சியை மிரட்டி வந்ததால் கோவை மாநகரத்தை விட்டு வெளியேற்றப்பட்டவர் என்பதும், அந்த உத்தரவை மீறி உள்ளே நுழைந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இம்மாமனுவேல் மோசசை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.