திருப்பூர்,ஆக.28: திருப்பூர் மாநகரில் உள்ள போக்குவரத்து சிக்னல்களை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. பனியன் தொழில் நிறைந்த திருப்பூரில் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், எப்போதும் பரபரப்பாக காணப்படும் திருப்பூர் மாநகர பகுதியில் அவிநாசி ரோடு, காங்கயம் ரோடு, தாராபுரம் ரோடு ஆகிய பகுதிகளில் சிக்னல்கள் செயல்பட்டு வருகிறது.
இதில் அதிகப்படியான சிக்னல் அவிநாசி ரோட்டில் உள்ளது. வாகன போக்குவரத்து அதிகமாக உள்ள மாநகரில் போக்குவரத்து சிக்னல் தேவைகளும் அதிகரித்துள்ளது. இருப்பினும் சில இடங்களிலில் சிக்னல் பழுதாகியும், சிக்னலில் சில லைட்கள் எரியாமலும் இருந்து வந்தது. இதனை நேற்று மாநகர ஊழியர்கள் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். இன்றும் சிக்னல் சரிசெய்யும் பணி நடைபெற உள்ளது.