திண்டுக்கல், ஆக. 23: திண்டுக்கல் மாநகராட்சி பள்ளியில் ரூ.45 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை மற்றும் கழிப்பறை கட்டும் பணியினை மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா ஆகியோர் துவக்கி வைத்தனர். திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 22 வார்டு கவடக்கார தெருவில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் கட்டிடங்கள் மிகவும் சிதலமடைந்து இருந்தது. இதனை சீரமைக்க அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது.
புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி நிதி ஒதுக்கியது. இதில் ரூ.34 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறைகள் மற்றும் ரூ.11 லட்சம் மதிப்பில் கழிப்பறைகள் கட்டுவதற்கான பணிகளை மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா ஆகியோர் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் 22வது வார்டு மாமன்ற உறுப்பினர் செந்தில்குமார், உதவி பொறியாஷளர் சுவாமிநாதன், வார்டு செயலாளர் தன்ராஜ், பிரதிநிதி உமர்பாருக், துணை செயலாளர் முத்துசாமி, மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.