மதுரை, ஆக. 12: மதுரை மாநகராட்சி வடக்கு மண்டல அலுகலத்தில் பொதுமக்களுக்கான குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நாளை (ஆக. 13) நடக்கிறது. இதன்படி மதுரை ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெறும் இம்முகாமில் கமிஷனர் தினேஷ்குமார், துணை மேயர் நாகராஜன், மண்டலத் தலைவர் சரவண புவனேஷ்வரி முன்னிலை வகிக்கின்றனர்.
இதில் விளாங்குடி, கரிசல்குளம், ஜவஹர்புரம், விசாலாட்சி நகர், அருள்தாஸ்புரம், தத்தனேரி மெயின் ரோடு, அய்யனார் கோவில், மீனாட்சிபுரம், பீ.பீ.குளம், நரிமேடு, அகிம்சாபுரம், கோரிப்பாளையம், தல்லாகுளம், சின்னசொக்கிக்குளம், கே.கே.நகர், அண்ணா நகர், சாத்தமங்கலம், பாத்திமா நகர், பெத்தானியாபுரம், பி.பி.சாவடி, கோச்சடை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கலந்துகொண்டு குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் அளித்து தீர்வு காணலாம். இத்தகவலை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.