மதுரை, ஜூலை 3: மதுரை மாநகராட்சி சார்பில், தமுக்கம் மைதானம் அறிவுசார் மையம் அருகே மாநகராட்சி வாகன காப்பகம் பகுதியில் ஜூலை 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை 3 நாட்கள் உணவுத்திருவிழா நடக்கிறது. இதில் குழந்தைகளுக்கான ஆடை அலங்காரம், கழிவுகளிலிருந்து கைவினைப்பொருட்கள் தயாரித்தல், கொழு கொழு குழந்தைகள், நெருப்பில்லா சமையல், ஓவியம் மற்றும் கோலம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது. தினமும் பாரம்பரிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளான கொம்புஇசை, பறை இசை, கரகாட்டம், மாடு ஆட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, மரக்கால் ஆட்டம், கிழவன் கிழவி ஆட்டம் மற்றும் நாட்டுப்புறப்பாடல்கள் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மூன்றாம் நாளில் உணவு திருவிழாவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் பாரம்பரிய உணவுத் திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். இத்தகவல் மதுரை மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி சார்பில் உணவுத் திருவிழா ஜூலை 11ல் துவங்குகிறது
0
previous post