மதுரை, ஆக.3: மதுரை ஆனையூரில் உள்ள மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் நேற்று மண்டல அளவிலான கூட்டம் மண்டலத்தலைவர் வாசுகி சசிக்குமார் தலைமையில் நடந்தது. உதவி கமிஷனர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். இதில் சுகதாரக்குழு தலைவர் ஜெயராஜ், கவுன்சிலர் பாபு உள்ளிட்ட பல்வேறு கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
குடிநீர் இணைப்பு வழங்குதல், புதிய சாலை அமைத்தல் உள்பட பல்வேறு அடிப்ப டை வசதிகளை மேற்கொள்வது ெதாடர்பாக ஆலோசிக்கப்பட்டது. கிழக்கு மண்டல பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.