துவரங்குறிச்சி, செப்.6: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு துவரங்குறிச்சி பகுதிகளில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ள இடங்களை பார்வையிட்ட, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் காவலர்களுடன் கொடி அணிவகுப்பு நடத்தினார். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பொன்னம்பட்டி பேரூராட்சி பகுதிகளில் வரும் சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொன்னம்பட்டி பேரூராட்சியின் பல பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனை அடுத்து நேற்று அப்பகுதிகளை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தலைமையிலான காவலர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் எஸ்பி வருண்குமார் தலைமையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.