கோவை, ஜூன் 24: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமை மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, இன்று (செவ்வாய்) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற இருந்தது. ஆனால், சில நிர்வாக காரணங்களால் இந்த முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அறிவித்துள்ளார்.