கோவை, ஜூன் 3: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று 3ம் தேதி நடைபெறுவதாக இருந்த குறைதீர்ப்பு முகாம் நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுவதாக மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் ரத்து
0