காரைக்கால், மே 25: மாதூர் வேளாண் அறிவியல் நிலையத்தின் சார்பில் அகலங்கண்ணு கிராமத்தில் மண் மற்றும் நீர் பாதுகாப்பு குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம் மாதூரில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் நிலையத்தின் மூலம் அகலங்கண்ணு கிராமத்தில் மண் மற்றும் நீர் பாதுகாப்பு குறித்த பயிற்சி வேளாண் அறிவியல் நிலையத்தின் முதல்வர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி வழிகாட்டுதலின்படி நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இந்தப் பயிற்சி முகாமில் தொழில்நுட்ப உரையாற்றிய வேளாண் அறிவியல் நிலையத்தின் தொழில்நுட்ப வல்லுநர்(உழவியல்) அரவிந்த் மழைநீர் அறுவடை மற்றும் நீர் சேமிப்பு முறைகள், சொட்டு நீர் பாசனம், மண் வள மேலாண்மை, ஒருங்கிணைந்த மேலாண்மையின் கீழ் பஞ்சகாவ்யம், மீன் அமிலம் மற்றும் தசகாவியம் ஆகியவற்றை எவ்வாறு தயாரிப்பது என்ற விளக்கத்தையும் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார். இந்த பயிற்சியில் அகலங்கண்ணு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பண்ணை மகளிர் 30 பேர் கலந்து கொண்டனர்.