நெல்லை, செப். 12: தென்காசி, நடுவக்குறிச்சி பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று (செப்.12) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும். தென்காசி மாவட்டம், மங்கம்மாள் சாலை உபமின் நிலையத்திற்கு உட்பட்ட தென்காசி புதிய பேருந்து நிலையம், மங்கம்மாள் சாலை பகுதிகள், சக்திநகர், காளிதாசன்நகர், ஹவுசிங்போர்டு காலனி, கீழப்புலியூர் ஆகிய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று (12ம்தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று ெதன்காசி மின்விநியோக செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம் தெரிவித்துள்ளார். இதேபோல் சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சி உபமின் நிலையத்திற்கு உட்பட்ட பெரியகோவிலான்குளம், சின்னகோவிலான்குளம், நடுவக்குறிச்சி மைனர், வேப்பங்குளம், சில்லிகுளம், சூரங்குடி ஆகிய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று (12ம்தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று சங்கரன்கோவில் மின்விநியோக செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.