Saturday, April 20, 2024
Home » மாணவிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய மாஜி ராணுவ வீரர்

மாணவிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய மாஜி ராணுவ வீரர்

by Karthik Yash

கிருஷ்ணகிரி, ஏப்.3: கிருஷ்ணகிரி அருகே மாணவிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய மாஜி ராணுவ வீரர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி அடுத்த கட்டிகானப்பள்ளி சத்யசாய் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார், முன்னாள் ராணுவ வீரர். இவர், அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாமாண்டு படித்து வரும் 19 வயது மாணவியின் செல்போனுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியுள்ளார். அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவி சென்று தட்டிக்கேட்டுள்ளார். அப்போது, சிவக்குமார் மிரட்டியதோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதுபற்றி மாணவி, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசில் அளித்த புகாரின்பேரில் சிவக்குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

one × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi