கிருஷ்ணகிரி, ஆக.6: கிருஷ்ணகிரி, சுபேதார்மேடு செந்தில் பப்ளிக் பள்ளியில் ‘பொறுப்பை ஈனும் தலைமைப்பண்பு’ என்ற கூற்றை மாணவர்கள் உணரும் படியாக மாணவர்கள் குழும தொடக்கவிழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு செந்தில் கல்வி நிறுவனங்களின் தலைவர் செந்தில் கந்தசாமி, துணைத்தலைவர் மணிமேகலை கந்தசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். செயலாளர் தனசேகர், தாளாளர் தீப்தி தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கிருஷ்ணகிரி மகாராஜகடை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், மற்றும் எஸ்ஐ நடராஜன் கலந்து கொண்டு பேசினர்.
செந்தில் பப்ளிக் பள்ளியில் 2024-25ம் ஆண்டிற்கான தலைமைப் பொறுப்பில் உள்ள மாணவர்கள் சிறப்பாகப் பணியாற்றுவோம் என உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இவ்விழாவில் முதன்மை நிர்வாக அலுவலர் கார்த்திகேயன், தலைமை நிர்வாக அதிகாரி மாதையன், முதன்மை முதல்வர் னிவாசன், முதல்வர் வேங்கடஅழகிரி, முதல்வர் வேதகுமார், பொறுப்பாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.