தர்மபுரி, நவ.15: தர்மபுரி ஒன்றியம், மாரவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ஆசிரியர்கள் சார்பில், மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சீருடைகளை வட்டார கல்வி அலுவலர் கலைச்செல்வி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், பள்ளி மேலாண்மை குழு தலைவர், உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் முருகன், சாந்தி, பள்ளி தலைமை ஆசிரியை சுகுணா, பட்டதாரி ஆசிரியை ராஜேஸ்வரி, இடைநிலை ஆசிரியர்கள் ஜெயந்தி, சுதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை
0
previous post