Wednesday, April 17, 2024
Home » மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

by Suresh

கந்தர்வகோட்டை,பிப்.14: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கல்லாக்கோட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 46வது பிறந்த தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புதுக்கோட்டை மருத்துவர் அணி அமைப்பாளர் முத்து கருப்பன் ஏற்பாட்டின் பேரில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கைபந்து, கால்பந்து, கேரம்போர்ட், கிரிக்கெட் பேட், ஸ்டேம், வளைபந்து, பேட்மிட்டர் மற்றும் பல விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதற்கு வடக்கு மாவட்ட கழக செயலாளர், திருச்சி விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினரும், முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே. செல்லப்பாண்டியன் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவம் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கே.கே. செல்லப்பாண்டியன் பேசிய, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் நல்லாட்சியில் துவக்க பள்ளி முதல் உயர் கல்வி வரை பயிலும் மாணவ- மாணவிகளுக்கு நல்ல திட்டங்களை வழங்கியுள்ளார். இதனை நல்ல முறையில் முறையாக பயன்படுத்தி வாழ்வில் உயர வேண்டும் என கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை ஒன்றிய குழு உறுப்பினரும் அட்மா சேர்மன் ராஜேந்திரன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் கலையரசன், மாவட்ட விளையாட்டு மேம்பட்டு அணி அமைப்பாளர் மணிவண்ணன், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் ரங்கசாமி, அவை தலைவர் சுப்பிரமணியன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் மாரிமுத்து, மற்றும் இருபால் ஆசிரியர்கள், பள்ளி மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், கழக முன்னோடிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

You may also like

Leave a Comment

seven + 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi