காரைக்குடி, ஆக.20: காரைக்குடி அருகே ஓ.சிறுவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு, தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. இதில் பள்ளி தலைமையாசிரியர் பீட்டர் வரவேற்றார். ஒன்றியகுழு தலைவர் சரண்யா செந்தில்நாதன் தலைமை வகித்தார்.
அரசு வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார். விழாவினை மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் கேஎஸ்.ரவி, ஒன்றிய செயலாளர் டாக்டர் ஆனந்த் ஆகியோர் துவக்கி வைத்தனர். தி.சூரக்குடி ஊராட்சி தலைவர் பொறியாளர் முருகப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றினார். ஊராட்சி தலைவர் குழந்தைவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.