கோவை, ஜூன் 27: கோவை நேரு கலை அறிவியல் கல்லூரியில் நடப்பாண்டிற்கான 27வது இளங்கலை முதல் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா நடந்தது.
இதில், நேரு கல்வி குழுமத்தின் தலைவர் கிருஷ்ணதாஸ், தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார், நிர்வாக இயக்குநர் நாகராஜா, கோவை மாவட்ட எஸ்.பி கார்த்திகேயன், நேரு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் விஜயகுமார், பதிவாளர் அனிருதன், ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் எஸ்பி கார்த்திகேயன் பேசுகையில்,‘‘மாணவர்கள் அறிவு சார் ஆர்வம், நெறிமுறை அர்ப்பணிப்பு, புதுமையான சிந்தனைகளை வளர்க்க வேண்டும். மாணவர்கள் தங்களது பெற்றோர்களுக்கு கடமைபட்டவர்களாக இருக்க வேண்டும். கல்லூரி விடுதியை பயன்படுத்த வேண்டும். வெளியில் தங்கி படிப்பதை தவிர்க்க வேண்டும்’’ என்றார்.