ஏற்காடு, நவ. 15: ஏற்காடு அரசினர் மேல்நிலைப்பள்ளியில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி, பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில், பேரிடர் மீட்பு குழுவினர் மாணவ, மாணவிகள் மத்தியில், பேரிடர் காலத்தில் தங்களை எப்படி பாதுகாத்துக்கொள்வது, மற்றவர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பயிற்சிகளை செய்து காட்டியதுடன், ₹20 ஆயிரம் மதிப்புள்ள பாதுகாப்பு பெட்டகத்தை வழங்கினர். அதேபோன்று மாணவிகளை அழைத்து செயல் முறைகளை செய்து காட்டச்சொல்லி விளக்கினர். நிகழ்ச்சியில் கிராம உதவியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.