ராசிபுரம், மே 21: 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற குருசாமிபாளையம் வித்யாமந்திர் பள்ளி மாணவர்களுக்கு, கலெக்டர் பாராட்டு தெரிவித்தார். ராசிபுரம் அருகே குருசாமிபாளையத்தில் செயல்பட்டு வரும் வித்யாமந்திர் மெட்ரிக் பள்ளி மாணவர் கோகுல், 12ம் வகுப்பு தேர்வில் 597 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளார். மாணவர் கோகுல் பாடவாரியாக தமிழ் பாடத்தில்-98, ஆங்கிலம்-99, இயற்பியல்-100, வேதியியல்-100, உயிரியல்-100, கணிதம்-100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும், இப்பள்ளி மாணவி வசந்தா 589 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவர் பிரகாஷ் 582 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். சிறப்பிடம் பெற்ற மாணவ -மாணவிகள் மற்றும் பள்ளியின் தலைவர் நாகேந்திரன், தாளாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் மனோகரன், பள்ளியின் முதல்வர் மகேந்திரன் உள்ளிட்டோர், நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு
63
previous post