காவேரிப்பட்டணம், ஆக.17: காவேரிப்பட்டணம் அருகே சவுட்டஅள்ளி ஊராட்சி ராமாபுரம் அரசு மேல்நிலை பள்ளியில், கடந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு படித்த மாணவர்களில், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் தலைமையில் பாராட்டு விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில், முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, தங்க காசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினர். தலைமை ஆசிரியர் சீனிவாசன் வரவேற்று பேசினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வெங்கடேசன் முன்னிலை வைத்தார். இதில் ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயக்கொடி கோவிந்தசாமி, பெரியண்ணன், ஆறுமுகம், பாபன், சுந்தரேசன், ராஜூ, காந்தி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியர் முருகன் நன்றி கூறினார்.
மாணவர்களுக்கு ஊக்கப்பரிசாக தங்க காசு
previous post