மதுரை: அண்ணா பல்கலைக்கழக எம்பிஏ முதலாமாண்டு மாணவ, மாணவிகள் கல்வி சுற்றுலாவாக நேற்று மதுரையில் உள்ள காந்தி மியூசியம் வந்தனர். காந்தியின் 75வது நினைவு ஆண்டை முன்னிட்டு காந்திய சிந்தனை குறித்து நடந்த கேள்வி – பதில் நிகழ்வில் அவர்கள் பங்ேகற்றனர். நிகழ்ச்சிக்கு மியூசிய செயலாளர் கே.ஆர்.நந்தாராவ் தலைமை வகித்தார். காந்திய விழுமியங்கள் எனும் தலைப்பில் கல்வி அலுவலர் நடராஜன் உரையாற்றினார். தொடர்ந்து மியூசிய வளாகத்தை மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி இணை பேராசிரியர் முத்துவேலாயுதம் செய்திருந்தார்.