கிருஷ்ணகிரி, ஜூன் 24: ஆந்திர மாநிலம் பாலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிட்டி தலைக்கொண்டைய்யா(44). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகேயுள்ள நாகமங்கலத்தில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தார். கடந்த 21ம் தேதி, வழக்கம்போல் ஒரு கட்டிடத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில், படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு பெங்களூரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின்பேரில், உத்தனப்பள்ளி போலீசார் அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.