சிங்கம்புணரி, ஆக. 17: சிங்கம்புணரியில் முன்னாள் அமைச்சர் செ.மாதவன் 91வது பிறந்த நாளை முன்னிட்டு மாதவன் கால்பந்து கழகம் சார்பாக பாரிவள்ளல் பள்ளியில் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் கலந்து கொள்ளும் 4ம் ஆண்டு மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டி நேற்று தொடங்கியது. கால்பந்தாட்ட போட்டி பரிசளிப்பு விழாவிற்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்க உள்ளார்.
தொடக்க விழாவிற்கு பள்ளி தலைவர் வெற்றிச்செல்வி ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் அருளாளன், உமா அருளாளன், முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் சியாம் பிராங்க்ளின் டேவிட் வரவேற்றார். மூன்று நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 16 அணிகள் கலந்து கொண்டனர். போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கார்த்திகேயன், தொடங்கி வைத்தார். முதல் மூன்று இடங்களை பெறும் அணிகளுக்கு நாளை மாலை பரிசளிப்பு விழா நடைபெறும். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேலாளர்கள் கிருஷ்ணன், சரவணன் உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.