குன்றத்தூர், செப்.6: மாங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக மாங்காடு போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அதன் அடிப்படையில் போலீசார் நேற்று தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மாங்காடு, அண்ணா தெருவில் உள்ள சுடுகாட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்த போரூர், காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அப்பாஸ்(எ)பட்டாஸ்(25) மற்றும் மாங்காடு பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் (38) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதில், அப்பாஸ் பிரபல ரவுடி என்பதும், சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவன் மீது சென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை மொத்தமாக விலைக்கு வாங்கி வந்து, அதனை மாங்காடு பகுதியில் உள்ள சுடுகாட்டில் வைத்து விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மாங்காட்டில் கஞ்சா விற்ற பிரபல ரவுடி உள்ளிட்ட இருவர் கைது
previous post