Sunday, May 28, 2023
Home » மழை நீர் வீணாகுவதை தடுக்க பூண்டி ஏரியில் 4 டிஎம்சி நீர் சேமிக்க நடவடிக்கை : அதிகாரிகள் ஆய்வு

மழை நீர் வீணாகுவதை தடுக்க பூண்டி ஏரியில் 4 டிஎம்சி நீர் சேமிக்க நடவடிக்கை : அதிகாரிகள் ஆய்வு

by Karthik Yash

திருவள்ளூர், மே 19: சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய நீர்நிலைகளில் பூண்டி ஏரியும் ஒன்று. இந்த ஏரி கட்டுமான பணிகள் 1940ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1944ம் ஆண்டு முடிக்கப்பட்டன. அப்போதைய சென்னை கவர்னராக இருந்த சத்தியமூர்த்தி இந்த நீர்த்தேக்கத்தை கட்ட சீரிய முயற்சி எடுத்துக் கொண்டதால் நீர்த்தேக்கத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. ஆரம்பத்தில் இந்த ஏரியில் 2.750 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டது. அதன் பிறகு ஏரியில் கூடுதல் தண்ணீரை சேமித்து வைக்க திட்டமிடப்பட்டு 1990ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை பணிகள் நடந்தன. இதையத்து தற்போது 3.231 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கப்படுகிறது. பருவமழையின் போது ஏரி முழுவதுமாக நிரம்புவதால் உபரி நீர் கொசஸ்தலை ஆற்றின் வழியாக கடலுக்கு திறக்கப்படுகிறது.

இதன்மூலம், ஆண்டுதோறும் பல டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் போய் சேருகிறது. இதை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் கூடுதல் தண்ணீர் சேமிக்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி ஏரியின் கொள்ளளவு மேலும் 0.74 டி.எம்.சி. நீரை சேமிக்க 27 ஆண்டுக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏரியின் மதகுகளை பலப்படுத்தும் பணிகள் ₹10.12 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது. எந்தெந்த பகுதிகளில் கரைகளை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்வது என்பது குறித்து ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முடிவடைந்த பின்னர் ஏரியில் கூடுதல் தண்ணீரை சேமித்து வைக்கும் பணிகள் தொடங்கப்படும். இதற்காக நவீன தொழில்நுட்பங்களை நீர்வளத்துறையினர் பயன்படுத்த உள்ளனர். இந்த பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வரும்போது பூண்டி ஏரியில் 4 டி.எம்.சி. வரை நீரை சேமித்து வைக்க முடியும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi