குளித்தலை, ஆக. 17: குளித்தலை அடுத்த கீழே குட்டப்பட்டி ஆதிபராசக்தி மன்றத்தின் சார்பில் மழை வளம் இயற்கை வளம் செழிக்கவும் தொழில் வளம் பெருகவும் கஞ்சி கலையம் முளைப்பாரி மற்றும் அக்கினி சட்டி ஏந்தி ஆன்மீக ஊர்வலம் நடைபெற்றது. இதில் விரதம் இருந்த பெண் பக்தர்கள் மற்றும் சிறுமிகள் கஞ்சி கலையத்தை தலையில் சுமந்து முக்கிய வீதி வழியாக மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து மீண்டும் கோயிலை சென்றடைந்தனர்.
அதன் பிறகு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் கஞ்சி வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கரூர் மாவட்ட நிர்வாக குழு மாவட்ட தலைவர் டாக்டர் ஜெய்சந்திரன் தலைமையில் கீழ குட்டப்பட்டி ஊர் பொதுமக்கள் செவ்வாடை தொண்டர்கள் செய்திருந்தனர்.