போச்சம்பள்ளி, ஜூலை 6: போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதியில், 500 ஏக்கர் பரப்பில் விவசாயம் பல்வேறு பயிர் சாகுபடியை மேற்கொள்கின்றனர். ஒவ்வொரு பட்டமாக விதைப்பு செய்து வருகின்றனர். தற்போது கோடைக்கு பின் ஆடிப்பட்டத்தில் உளுந்து, தட்டப்பயிர், துவரை, பாசிப்பயிறு ஆகியவற்றை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். கோடை உழவு முடிந்து விளைநிலங்களை விதைப்பிற்கு தயார் நிலையில் வைத்துள்ளனர். ஆனால், போதுமான மழை இல்லாததால், போச்சம்பள்ளி பகுதியில் மானாவரியாக சாகுபடி செய்த விவசாயிகள் கனமழை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘ஆடி மாத பிறப்புக்கு இன்னும் சில வாரங்கள் உள்ளது. தற்போது கனமழை பெய்தால் ஆடி பிறக்கும் முன்பாகவே விரும்பிய பயிரை விதைத்திருப்போம். ஆனால், மழை பெய்தும், பூமிக்குள் ஈரப்பதம் இல்லை. எனவே, கனமழையை எதிர்பார்த்து நாங்கள் காத்திருக்கிறோம்,’ என்றனர்.
மழையை எதிர்நோக்கி காத்திருக்கும் விவசாயிகள்
0
previous post