திருப்பூர், ஆக.22: திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு கடந்த 2 நாட்களில் திருப்பூர், காங்கயம், உடுமலை, தாராபுரம், பல்லடம், அவினாசி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பெட்டி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 11 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக அதிகாரிகள் 94440 42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.