கூடலூர், ஆக. 14. உதகை மண்டலம் சமூக சேவைகள் சங்கம் சார்பில் கூடலூர் சுற்று வட்டார பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட கோக்கால், எஸ்எஸ்நகர், வாழைத்தோட்டம், மண்வயல், புத்தூர் வயல் பகுதிகளில் வசிக்கும் சுமார் 70 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
மேல் கூடலூர் தூய மரியன்னை ஆலய வளாகத்தில் யுஎஸ்எஸ் அமைப்பின் நிர்வாக இயக்குனர் ஜான் ஜோசப் தனிஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், டெல்லி காரிடாஸ் இந்தியா அமைப்பின் செயல் இயக்குனர் கொக்கலில் நிவாரண உதவிகளை வழங்கினார். காரிடாஸ் அமைப்பு சார்பில் டாக்டர் செந்தில், பங்குத்தந்தை ஆண்டனி ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கூடலூர் அருள்தந்தை வின்சென்ட், தூய மரியன்னை பள்ளி தாளாளர் அருள் தந்தை சார்லஸ் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். திட்ட அலுவலர் சுப்ரியா நன்றி கூறினார்.