பரமக்குடி,ஆக.23: பரமக்குடி உட்கோட்டத்திற்கு உட்பட்ட நெடுஞ்சாலை துறை சாலைகளில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக அரசு நெடுஞ்சாலை துறையின் கீழ் உள்ள சாலைகள் மழையால் சேதம் அடைந்து, போக்குவரத்திற்கு உகந்ததாக இல்லை. இதனால் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என தமிழக அரசு நெடுஞ்சாலை துறை சார்பாக உத்தரவிட்டுள்ளது.
இவனைத் தொட ர்ந்து, பரமக்குடி உட்கோட்டத்திற்கு உட்பட்ட பி.கொடிக்குளம் சாலையில் கனமழையின் காரணமாக சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இந்நிலையில், சாலையை நெடுஞ்சாலைத் துறையினர் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இப்பணியினை நெடுஞ்சாலைத் துறை கோட்டப்பொறியாளர் முருகன், உதவிகோட்ட பொறியாளர் கண்ணன், உதவிப் பொறியாளர் பிரபாகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.