திருப்பூர், ஜூன் 18: திருப்பூர் பிரண்ட்லைன் மிலேனியம் பள்ளியில் மழலையர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது. குழந்தைகள், தங்களது விரல்களால் அரிசியில் அகரம் என எழுதி தங்களது கல்வியை துவக்கினர். இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் டாக்டர் சிவசாமி, செயலாளர் டாக்டர் சிவகாமி, பள்ளி முதல்வர் லாவண்யா, தலைமை ஆசிரியை கமலாம்பாள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இதில், பெற்றோர்கள் தலைமை ஆசிரியருடன் இணைந்து குழந்தைகளுக்கு வித்யாரம்பம் துவக்கி வைத்தனர். மேலும், பள்ளியின் தாளாளர் மற்றும் செயலாளர் சார்பில் புத்தகப்பை, புத்தகங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.