சூளகிரி, ஆக.26: சூளகிரியில், மளிகை கடைகளில், கர்நாடகா மதுபானம் விற்பனை செய்வதாக பேரிகை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், நேற்று பேரிகை போலீசார் கடைகளில் சோதனை மேற் கொண்டனர். அப்போது எஸ்.தட்டனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜப்பா(60) என்பவரும், தேர்பேட்டையை சேர்ந்த வெங்கடேஷ் (32) என்பவரும், கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபான பாக்கெட்டுகளை கடத்தி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து மதுபான பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, 2 பேரையும் கைது செய்தனர்.
மளிகை கடையில் மது விற்ற 2 பேர் கைது
previous post