சேலம், ஆக. 19: சேலம் சீலநாய்க்கன்பட்டி சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் குமரவேல் (45). இவர் சீலநாய்க்கன்பட்டியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 16ம் தேதி இரவு வழக்கம் போல கடையை பூட்டிச் சென்ற இவர், நேற்று முன்தினம் காலை வந்து திறந்து பார்த்தார். அப்போது கடையின் பீரோவில் வைத்திருந்த 4 பவுன் தங்க நகை, கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ.70 ஆயிரம் பணம் மற்றும் ஏடிஎம், பான் மற்றும் ஆதார் கார்டு ஆகியவை மாயமாகியிருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த குமரவேல், அன்னதானப்பட்டி போலீசுக்கு தகவல் அளித்தார். இன்ஸ்பெக்டர் ஜெய்சல்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதில், மளிகை கடையின் பூட்டை உடைத்த மர்மநபர்கள், உள்ளே இருந்த பணம், நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. ெகாள்ளையர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.