பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே திருக்களம்பூரில் நூலக வாசகர் வட்டம் சார்பாக நூலக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற ஆசிரியர் கேசவன் தலைமை தாங்கினார். நூலகர் ரதி வரவேற்றார். வாசகர் வட்டத் தலைவருமான கருணாநிதி நோக்கவுரையாற்றினார். ஊராட்சி மன்ற துணை தலைவர் மணி, ஒன்றியக்குழு உறுப்பினர் பழனிச்சாமி, முத்தமிழ் பாசறை அறங்காவலர் ராஜமுகமது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி, கவிஞர் தமிழ்ச்செம்மல், தங்கம் மூர்த்தி சிறப்புரையாற்றினர். முத்தமிழ்ப்பாசறை அறங்காவலர்குழு செயலாளர் சந்திரன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.