மல்லசமுத்திரம், டிச.12: திருச்செங்கோடு, வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில், நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளான கருமனூர், மல்லூர், அக்கரைப்பட்டி, பாலமேடு ஆகிய பகுதிகளில் இருந்து 75 மூட்டை பருத்தியை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் பி.டி. ரகம் குவிண்டால் ₹6909 முதல் ₹7,555/ வரையும், கொட்டு ரகம் பருத்தி ₹3,899 முதல் ₹4,859 வரையும் ஏலம் போனது. மொத்தம் ₹1.50 லட்சத்திற்கு விற்பனையானது. சேலம், ஈரோடு, கோவை, அவிநாசி பகுதியில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர்.
மல்லசமுத்திரத்தில் 75 மூட்டை பருத்தி ₹1.50 லட்சத்திற்கு ஏலம்
0