மல்லசமுத்திரம், அக்.17: மல்ல சமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில், காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர், மாலை 4 மணியளவில் பெய்ய துவங்கி மழை இரவு 9 மணி வரை நீடித்தது. இதனால் மல்லசமுத்திரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் மழை நீர் வெள்ளமென ெபருக்கெடுத்து ஓடியாது. நிலக்கடலை பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மோர் பாளையம், கூத்தாநத்தம், கருமனூர், சூரியகவுண்டம்பாளையம், ஆகிய பகுதிகளில் பரவலாக கன மழை கொட்டி தீர்த்தது.