மதுரை, ஆக. 18: மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் நேற்றைய மலைக்காய்கறிகளின் விலை விபரம் வருமாறு: கேரட் கிலோ ரூ.50 முதல் ரூ.70 வரை, சோயா ரூ.120, பட்டர் பீன்ஸ் ரூ.130, ஜெர்மன் பீன்ஸ் ரூ.60, ரிங் பீன்ஸ் ரூ.60, பட்டானி ரூ.130, சவ்சவ் ரூ.20, குடை மிளகாய் ரூ.60, பஜ்ஜிமிளகாய் ரூ.50. பீட்ருட் கிலோ ரூ. 40 முதல் ரூ.50 வரை, முள்ளங்கி ரூ.30, டர்னிப் ரூ.50, நூக்கல் ரூ.50, சேனை ரூ. 50, சேம்பு ரூ.50, கருனை ரூ.90, உருளை ரூ.60, முட்டைகோஸ் ரூ.30, கோவக்காய் ரூ.40 வியாபாரிகள் கூறும்போது, ‘‘மழை உள்ளிட்ட காரணங்களாலும், விசேஷ தினங்களாலும் மலைக்காய்கறிகள் வரத்து குறைவு, தேவை அதிகரிப்பால் விலை அதிகரித்துள்ளது. அதேநேரம் நாட்டு காய்கறிகளான தக்காளி, கத்தரி, வெண்டை, பீர்க்கை, புடலை, பாகல், சுரை உள்ளிட்டவற்றின் விலை கடந்த வாரத்தை ஒப்பிடும்போடு பாதியளவிற்கு சரிந்துள்ளது. குறிப்பாக கத்தரிக்காய் கிலோ ரூ.30, தக்காளி ரூ.20, வெண்டை ரூ.10, பாகல் ரூ.20, பீர்க்கை ரூ.20, சுரை ரூ.15 என மிகக்குறைவாக விற்கிறது’’ என்றனர்.